Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமனம்

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (20:48 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தால் வெளியேறிய நிலையில் பாகிஸ்தான் அணிக்கு புதிய  கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் பல  நேபாளம், இங்கிலாந்து, வங்கதேசம்,பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, 9 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றம் அளித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து லீக் போட்டிகளோடு வெளியேறியது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று இன்சமாம் உல் ஹக் தன்னுடைய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

 இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது, அதன் தேர்வுக்குழு  உறுப்பினர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதவி நீக்கம் செய்தது.

இந்த நிலையில் இன்று  பாகிஸ்தான் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் பாபர் அசாம்.

நடப்பு  உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில்  இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து, டி 20, டெஸ்ட், ஒருநாள் என அனைத்து வகை போட்டிகளில் இருந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் பாபர் அசாம்.

விரைவில் புதிதாக கேப்டன் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்களை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

அதன்படி, பாகிஸ்தான் அணியின் டி -20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு சஹீன் ஷா அப்ரிடியையும், ஷான் மசூத் –ம் கேப்டனாக நியமனம் செய்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இப்புதிய கேப்டன்களின் தலைமையில் பாகிச்தான் அணி சிறப்பாக விளையாடுமா என என இனி வரும் போட்டிகளில் இருந்து தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது டிஎன்பிஎல் சீசன் 8: எந்த சேனலில் ஒளிபரப்பு?

ஜெய் ஷாவுக்காக மைதானத்தை மாற்றாதீர்கள்… மும்பை ரசிகர்களின் செய்தி அதுதான் – ஆதித்யா தாக்கரே கருத்து!

ஹர்திக் பாண்ட்யாவை நான் அதிகமாகவே திட்டிவிட்டேன்… ஒத்துக்கொண்ட முன்னாள் வீரர்!

ரோஹித்தோடு 15 ஆண்டுகள் விளையாடுகிறேன்… அவரை இப்படிப் பார்த்ததில்லை- கோலி பகிர்ந்த தருணம்!

என் ஓய்வுக்கு இன்னும் வெகுதூரம் உள்ளது… நான் இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன் – பும்ரா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments