கப்பு முக்கியம் பிகிலே.. முதன்முறையாக கோப்பையை ஏந்திய நடராஜன்! – வைரலாகும் புகைப்படம்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (14:42 IST)
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா வென்ற நிலையில் தமிழக வீரர் நடராஜன் கோப்பையை வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டிகளில் 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா கோப்பையை கைப்பற்றியது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தியுள்ளது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இத்தனைக்கும் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் ரஹானே போன்ற புதியவரின் தலைமையில் இந்திய அணி இதை சாதித்துள்ளது. இந்த தொடரில் தொடர்ந்து அபாரமான பந்துவீச்சை கொண்டு தன் திறமையை நிரூபித்த தமிழக வீரர் நடராஜன்தான் தொடர்ந்து பேசிபொருளாக இருந்து வந்தார்.

இந்நிலையில் இந்தியா கோப்பையை வென்றதை தொடர்ந்து அணியினருடன் முதன்முறையாக கோப்பையை கையில் ஏந்தியபடி நடராஜன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அவரது விடாமுயற்சியையும், திறமையையும் பாராட்டி பலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments