Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் தொடங்கி ஒரு வெற்றிக்கூட பெறாத மும்பை இந்தியன்ஸ்! – இன்று ராஜஸ்தான் ராயல்ஸுடன் மோதல்!

Advertiesment
RR vs MI

Prasanth Karthick

, திங்கள், 1 ஏப்ரல் 2024 (13:17 IST)
ஐபிஎல் சீசன் தொடங்கி இன்னும் ஒரு வெற்றிக் கூட பெறாத மும்பை இந்தியன்ஸ் அணி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.



ஐபிஎல் சீசன் தொடங்கி 13 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் எல்லா அணிகளும் குறைந்தபட்சம் 1 வெற்றி முதல் 2 வெற்றி வரை பெற்று புள்ளிப்பட்டியலில் போட்டிப் போடத் தொடங்கியுள்ளன. ஆனால் 5 முறை சாம்பியன் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி நிலையோ இன்னும் பரிதாபகரமானதாகவே இருந்து வருகிறது.

அனைத்து அணிகளும் தலா 1 போட்டியாவது வென்றுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் ஒரு போட்டியில் கூட வெல்லாமல் புள்ளிக் கணக்கை இன்னும் தொடங்காமலே உள்ளது. அதற்கு காரணம் அணிக்குள் நடக்கும் உள்நாட்டு போர் என பேசிக் கொள்ளப்படுகிறது.


இந்நிலையில் இந்த சீசனின் 14வது போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை போட்டியிட்ட 2 போட்டிகளிலுமே தொடர் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர், ஷிம்ரன் ஹெட்மெயர் என வலுவான பேட்டிங்கும், ரவிச்சந்திரன் அஷ்வின், ட்ரெண்ட் போல்ட், யுஸ்வெந்திர சஹல், பர்கர் போன்ற சிறப்பான பவுலிங் லைன் அப்பும் ராஜஸ்தானுக்கு உள்ளது.

மும்பை அணியில் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட் என நல்ல பேட்டிங் லைன் அப் உள்ளது. பும்ரா. கோட்ஸி போன்ற பவுலர்களும் உள்ளனர். ஹர்திக் பாண்ட்யாவின் கேப்பிட்டன்சி மேம்பட வேண்டும் என்பது பலரது கருத்தாக உள்ளது. இன்று மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறுவதில் இவை முக்கிய பங்காற்றும் என நம்பலாம்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிஎஸ்கேவை வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்டுக்கு அபராதம்! – ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு!