Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிப் பாதைக்கு திரும்புமா மும்பை இந்தியன்ஸ்… கே கே ஆர் அணியோடு பலப் பரீட்சை!

Advertiesment
வெற்றிப் பாதைக்கு திரும்புமா மும்பை இந்தியன்ஸ்… கே கே ஆர் அணியோடு பலப் பரீட்சை!

vinoth

, வெள்ளி, 3 மே 2024 (15:49 IST)
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 48 போட்டிகள் முடிந்துள்ளன இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்த சீசனில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விளையாட வந்த ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மிக மோசமாக விளையாடி வருகிறது. புள்ளிப்பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது. 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதே போல பெரிதாக எந்த எதிர்பார்ப்புமில்லாமல் களமிறங்கிய கே கே ஆர் அணி அதிரடியாக விளையாடி அசத்தி வருகிறது. ஒன்பது போட்டிகளில் ஆறு போட்டிகளில் வென்று மூன்றி தோற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.  இந்த இரு அணிகளும் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால்தான் மும்பை அணி ப்ளே ஆஃப் அதிசய வாய்ப்பு கொஞ்சமாவது தக்கவைக்கும் என்பதால் இன்றைய போட்டி முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹர்திக் தலைமையில் விளையாடுவது சாதாரணமான ஒன்றுதான்… ரோஹித் ஷர்மா கருத்து!