Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகமது ஷமியின் விவாகரத்து வழக்கு… முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

vinoth
புதன், 2 ஜூலை 2025 (07:40 IST)
இந்திய கிரிக்கெட்  அணியின் மூத்த வீரரான ஷமி தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவருக்குப் பல பெண்களோடு தொடர்பு இருப்பதாகவும் பரபரப்பான செய்தியினை வெளியிட்டு அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்றார்அவரது முன்னாள் மனைவி ஹாசின் ஜகான்.

இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் இவர்களின் மகள் ஹாசினோடு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர்களின் விவாகரத்து சம்மந்தமான தனக்கு மாதம் 10 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் வேண்டுமென ஹாசின் கேட்டிருந்தார். இந்த வழக்கில் ஹாசினுக்கு மாதம் 1.4 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டுமென மேற்கு வங்கத்தின் அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையெதிர்த்து ஹாசின் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷமி மாதம் நான்கு லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக அவருக்கு வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனை ட்ரேட் செய்ய ஆர்வமாக உள்ளோம்… சிஎஸ்கே நிர்வாகத்திடம் இருந்து வெளியான தகவல்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியில் நடக்கப் போகும் இரண்டு மாற்றங்கள்… உள்ளே வரும் இளம் வீரர்கள்!

முகமது ஷமியின் விவாகரத்து வழக்கு… முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

126 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை..! ஒரே இன்னிங்ஸில் 820 ரன்கள் குவித்து சாதனை!

முதல் டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் செய்த தவறு… இடத்தை மாற்றிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments