Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்க அதை செஞ்சிருந்தா நேத்து ஜெயிச்சிருப்போம்! – மனம் நொந்த தோனி!

Advertiesment
நாங்க அதை செஞ்சிருந்தா நேத்து ஜெயிச்சிருப்போம்! – மனம் நொந்த தோனி!
, சனி, 3 அக்டோபர் 2020 (08:47 IST)
நேற்றைய ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சன் ரைஸர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து கேப்டன் தோனி கூறியுள்ளார்.

கடந்த மூன்று ஆட்டங்களில் ஒரு முறை மட்டுமே வென்று பிறகு தொடர் தோல்வியை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய போட்டியிலும் தோல்வியை தழுவியது பலருக்கு அதிர்ச்சியை அளித்தது.

முதலில் பேட்டிங் செய்த சன் ரைஸர்ஸ் 164 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவதாக பேட்டிங் செய்த சிஎஸ்கே 157 ரன்களில் ஆட்டமிழந்தது. 7 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவின் வெற்றி பறிபோனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள சிஎஸ்கே கேப்டன் தோனி ”என்னால் நிறைய பந்துகளை சரியாக மிடில் செய்யமுடியவில்லை. எப்படியாவது அடித்து நொறுக்க வேண்டும் என எண்ணியது காரணமாக இருக்கலாம். நாங்கள் நிறைய விஷயங்களை சரிசெய்து கொள்ள வேண்டி இருக்கிறது. 16வது ஓவருக்கு பிறகு செய்த தவறையே திரும்பவும் செய்தோம். ஒட்டுமொத்தமாக ஆட்டத்தின் திறன் இன்னும் மேம்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2020; தோனியின் முயற்சி பலிக்கவில்லை ! ஐதராபாத் அணி அட்டகாசமான வெற்றி.