ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளர் மஹாயா நிடினி, இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியின் முதல் கருப்பின கிரிக்கெட் வீரர் மஹாயா நிடினி. வேகப்பந்து வீச்சாளரான இவர், தென் ஆப்பிரிக்கா அணிக்காக 101 டெஸ்ட் போட்டிகளிள் விளையாடி 390 விக்கெட்டுகளையும், 173 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.
பின்னர், வாய்ப்புகள் வழங்கப்படாமல் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 1999ஆம் ஆண்டில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டார். பின்னர், அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில்தான் ஜிம்பாப்வே அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு ஜிம்பாப்வே அணி இந்திய அணியுடன் தான் முதன் முதல் தொடராக இந்திய அணியுடன் விளையாடியது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், ஜிம்பாப்வே அணி இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய ஒருநாள் தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் இந்திய ஒருநாள் அணி கேப்டன் தோனியை சந்தித்து பேசினார். பின்னர், தோனியிடம் மஹாயா நிடினி பேட் ஒன்றில் ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார். இந்தப் புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.