Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்சர் விளாசல்: ரோஹித் சர்மா முதலிடம்

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2023 (16:19 IST)
உலகக் கோப்பை தொடரில்  அதிக சிக்சர்ஸ் விளாசிய வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் ரோஹித்சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில், இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன.

இந்த லீக் சுற்றுகள் முடிவில் பல  நேபாளம், இங்கிலாந்து, வங்கதேசம்,பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின. விதிமீறலில் ஈடுபட்டதாக இலங்கை அணியை ஐசிசி  சஸ்பெண்ட் செய்துள்ளது.

இந்த நிலையில்,  இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன

நடப்பு உலகக் கோப்பை தொடரில்  அதிக சிக்சர்ஸ் விளாசிய வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

அவர் 9 லீக் ஆட்டத்தில் 24 சிக்சர்கள் விளாசியுள்ளார். கிளேன் மேக்ஸ் வெல் (ஆஸ்திரேலியா) 22 சிக்சர்களும், குயின் டி காக்( தென்னாப்பிரிக்கா) 21 சிக்சர்களும், டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா) 20 சிக்சர்களும், மிட்செல் (ஆஸ்திரேலியா) 20 சிக்சர்களும் விளாசியுள்ளனர்.
வரும் அரையிறுதி ஆட்டத்திலும் இந்த வீரர்களின் அதிரடி ஆட்டம் தொடரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் ஏலம்: வீரர்கள் தேர்வில் வித்தியாசம் காட்டிய சிஎஸ்கே - அணியை ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய குறை!

ஆண்டர்சன் முதல் சர்பராஸ் கான் வரை… ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பட்டியல்!

பெங்களூர் அணியினரைக் கட்டியணைத்து நன்றி சொன்ன ஆகாஷ் அம்பானி… எதற்குத் தெரியுமா?

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.. 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்த அணி..!

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments