Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (12:31 IST)
நாளைத் தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இதற்காக அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் முகாமிட்டிருக்க, இந்தியா மட்டும் துபாயில் உள்ளது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது.

முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில் இந்திய அணியுடன் இருந்த பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அவரது தந்தை காலமானதால் இப்போது தென்னாப்பிரிக்காவுக்குக் கிளம்பியுள்ளார். இதனால் இந்திய அணி விளையாடும் முதல் இரண்டு போட்டிகளில் அவர் இருக்க மாட்டார். இது துபாயில் பந்துவீசி அனுபவமற்ற இந்திய பந்துவீச்சு யூனிட்டுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

அடுத்த கட்டுரையில்
Show comments