ஆட்டநாயகன் பரிசுப் பணத்தை அவர்களுக்குக் கொடுக்கிறேன்… சிராஜ் செய்த நெகிழ்ச்சி செயல்!

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (07:07 IST)
ஆசியக்கோப்பை இறுதி போட்டிகள் தொடங்கி சில மணிநேரங்களிலேயே இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று  8 ஆவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. இந்த போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் முகமது சிராஜ்.

இதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்ற சிராஜ், அவருக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையான 4.15 லட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில்) பணம் முழுவதையும் கொழும்பு பிரேமதாசா மைதானப் பராமரிப்பாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இந்த தொடர் முழுவதும் மழை குறுக்கிட்டு போட்டிகளை தடை செய்தது. பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் மைதானத்தை தயார் செய்து தொடரை நிறைவு செய்ய உதவிய பராமரிப்பாளர்களுக்கு தனது ஆட்டநாயகன் பணத்தைக் கொடுத்துள்ள சிராஜுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணகி நகர் கார்த்திகாவின் இந்திய கபடி அணி தங்கம்.. உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!

டி 20 தொடரில் களமிறங்கும் மேக்ஸ்வெல்.. இந்திய அணிக்கு பெரும் சவாலா?

விற்பனைக்கு வருகிறது பெங்களூரு ஐபிஎல் அணி.. 6 நிறுவனங்கள் போட்டா போட்டி..!

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்… கங்குலியை முந்திய ரோஹித் ஷர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

அடுத்த கட்டுரையில்
Show comments