கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பின்னர் காயம் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகி அறுவை சிகிச்சை செய்துகொண்டு, தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் அணிக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து பேசியுள்ளார். அதில் “ரோஹித் ஷர்மா வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். ஆனால் அவர் எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்யாவிட்டால், அவ்வளவுதான். நீங்களே அவர் முகத்தில் வரும் எதிர்வினைகளை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதைப் புரிந்துகொண்டு நாங்கள் அதற்கேற்றார்போல செயல்படுவோம்.” எனக் கூறியுள்ளார்.
இதே கருத்தை இன்னொரு சக வீரரான ஸ்ரேயாஸ் ஐயரும் கூறியுள்ளார். அதில் “ரோஹித் ஷர்மாவோடு நாங்கள் பல ஆண்டுகள் விளையாடியுள்ளோம். அதனால் அவர் என்ன நினைக்கிறார் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியும்” எனக் கூறியுள்ளார்.