Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை அணியில் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் யார்?... விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த ஷமி!

Webdunia
சனி, 23 செப்டம்பர் 2023 (12:45 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று மொஹாலியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் முகமது ஷமி.

இதன்மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக ஒருநாள் அணியில் ஷமி தொடர்ந்து எடுக்கப்படுவதில்லை. அணியின் பேட்டிங்கை வலுப்படுத்தும் விதமாக பேட்ஸ்மேன் பவுலரான ஷர்துல் தாக்கூர் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக எடுக்கபடுகிறார்.

ஆனால் அவர் பவுலிங்கில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அபாரமாக பந்துவீசி தன்னை உலகக் கோப்பை அணியில் ஏன் எடுக்க வேண்டும் என்பதை கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் காட்டியுள்ளார் ஷமி. இதனால் அவரது இடம் உலகக் கோப்பை அணியில் உறுதியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் முக்கியமே இல்ல..” கோலிக்கு ஆதரவாகப் பேசிய சேவாக்!

‘இன்னும் நீ செல்லவேண்டிய தூரம் நிறையவுள்ளது’ … தன் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியைப் பாராட்டிய யூசுப் பதான்!

நடராஜனை அணியில் எங்கே வைப்பதென்று சொல்லுங்கள்?.. டெல்லி அணி ஆலோசகர் பீட்டர்சன் கேட்கும் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments