பந்தில் எச்சிலைத் தடவ அனுமதிக்க வேண்டும்… ஐசிசிக்கு முகமது ஷமி கோரிக்கை!

Webdunia
வியாழன், 6 மார்ச் 2025 (09:58 IST)
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி சமீபத்தில் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பங்களிப்பு செய்த அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின்  முதல் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை அவர் வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் ஐசிசிக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

அதில் “பந்தில் எச்சில் தடவ அனுமதி இல்லாததால் பவுலர்களால் ரிவர்ஸ் ஸ்விங்க் செய்ய முடியவில்லை. ஐசிசி அதற்கு அனுமதி அளித்தால் கண்டிப்பாக போட்டி விறுவிறுப்பானதாக மாறும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments