436 நாட்களுக்குப் பிறகு சர்வதேசக் கிரிக்கெட்டில் களமிறங்கிய ஷமி!

vinoth
புதன், 29 ஜனவரி 2025 (07:10 IST)
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி லண்டனில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனாலும் அவருக்கு காலில் வீக்கம் இருந்ததால் பல முக்கியமானத் தொடர்களை இழந்தார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் அவர் பல மாதங்கள் தங்கி பயிற்சி எடுத்தார்.

அதையடுத்து அவர் உள்ளூர் போட்டியில் விளையாடிய போதும் அவருக்கு காலில் வீக்கம் இருந்ததால் அவர் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் அவர் இடம்பெற்றார். ஆனால் முதல் இரண்டு போட்டிகளிலுமே அவர் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி 20 போட்டியில் ஷமி களமிறங்கினார். 3 ஓவர்கள் பந்துவீசிய அவர் 25 ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேசப் போட்டிகளில் சுமார் 436 நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் களம்கண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

இந்திய அணி வெற்றி பெற்றபோது கவுதம் காம்பீரை ஏன் பாராட்டவில்லை? கவாஸ்கர் கேள்வி..!

WBBL தொடரில் இருந்து திடீரென விலகிய ஜெமிமா.. ஸ்மிருதி மந்தனா காரணமா?

மகளிர் பிரீமியர் லீக் 2026 ஏலம் எப்போது? தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், சோஃபி டிவைனுக்கு பெரும் கிராக்கி..!

நான் சந்தித்ததிலேயே கோலிதான் GOAT… மிட்செல் ஸ்டார்க் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments