Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி ஒரு பிட்ச்சில் 7 விக்கெட்களா? அரையிறுதியில் கலக்கிய ஷமி!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (07:36 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதிப் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழந்து 397 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து அணி 327 ரன்கள் மட்டும் சேர்த்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசி வரை நியுசிலாந்து அணியும் இலக்கை துரத்தி போராடியது. அதனால் ஒரு கட்டம் வரை இந்திய அணியும் வெற்றி நம் பக்கம்தான் என நிம்மதியாய் இருக்க முடியாமல்தான் இருந்தது. ஆனால் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக முகமது ஷமியின் பவுலிங் அமைந்தது.

தட்டையான விக்கெட்டில் இரு நாட்டு அணிகளின் பவுலர்களும் விக்கெட்கள் வீழ்த்தவே தடுமாறிய நிலையில் ஷமி மட்டும் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது. 57 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்கள் வீழ்த்திய ஷமி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த உலகக் கோப்பையில் அவர் மொத்தம் 23 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெத்தையைப் போட்டு சொகுசாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள்… வைரலாகும் ட்ரோல்கள்!

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் உச்சம் தொட்ட இந்திய வீரர்!

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

அடுத்த கட்டுரையில்
Show comments