Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பயிற்சியின் போது கூட அவரை எதிர்கொள்ள விரும்பமாட்டேன்… இந்திய பவுலர் குறித்து கே எல் ராகுல் கருத்து!

vinoth
வியாழன், 27 பிப்ரவரி 2025 (14:40 IST)
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி சமீபத்தில் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பங்களிப்பு செய்த அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின்  முதல் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்களை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை அவர் வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் ஷமி குறித்துப் பேசியுள்ளார்.

அதில் “இந்திய அணியில் ஷமி கடினமான பவுலர். அவரை பயிற்சியின் போது கூட அவரை எதிர்கொள்வதை நான் விரும்பமாட்டேன்” எனக் கூறியுள்ளார். அதே போல மற்ற அணி பவுலர்களில் ரஷீத் கானை எதிர்கொள்வதை விரும்பமாட்டேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரொனால்டோ போல கோலி ஒரு முழுமையான வீரர்.. பாராட்டிய பாகிஸ்தான் பவுலர்!

கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் த்ரில் வெற்றி.. பாகிஸ்தான் போலவே இங்கிலாந்தும் வெளியேற்றம்..!

அப்ராரின் செயல் அநாவசியமானது.. கண்டித்த முன்னாள் வீரர்!

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி தேரோட்டம்: ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..

சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றம்.. 100 காவலர்கள் டிஸ்மிஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments