Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்தான் வெற்றிக்கும் தோல்விக்குமான காரணமாக இருப்பார்… முன்னாள் வீரர் கணிப்பு!

vinoth
ஞாயிறு, 9 மார்ச் 2025 (13:00 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று சொன்னதால் இந்திய அணி நடக்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்தன.

ஒரே மைதானத்தில் இந்திய அணி விளையாடியதால் இந்த தொடருக்காக இந்திய அணி ஒரு கிலோ மீட்டர் கூட பயணம் செய்யவில்லை. அதே நேரம் நியுசிலாந்து அணி கிட்டத்தட்ட 7048 கிமீ தூரம் பயணம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு அணிகளும் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் பேசும்போது “ஹர்திக் பாண்ட்யா அணியில் இருக்கும்போது இந்திய அணி 12 வீரர்களோடு விளையாடுவது போல. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் தாக்கம் செலுத்தக் கூடியவர். 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் அவரை இந்திய அணி மிஸ் செய்தது. இன்றைய போட்டியில் அவர்தான் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசமாக இருக்கப் போகிறார். சிறந்த அணி வெல்லும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments