Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலி ஆபத்தானவர்தான்… ஆனால் இந்த விஷயத்தை மட்டும் சரிசெய்ய வெண்டும்- முன்னாள் வீரர் அறிவுரை!

கோலி ஆபத்தானவர்தான்… ஆனால் இந்த விஷயத்தை மட்டும் சரிசெய்ய வெண்டும்- முன்னாள் வீரர் அறிவுரை!

vinoth

, ஞாயிறு, 9 ஜூன் 2024 (07:15 IST)
இன்று இந்த உலகக் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடக்கவுள்ளது.  இந்த போட்டியைக் காண கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கும் நிலையில் மழை காரணமாக இந்த போட்டி தடைபட வாய்ப்புள்ளதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டு கோலி தொடக்க ஆட்டக்காரராக இறக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் மூன்றாம் வீரராக களமிறங்குகிறார். இது எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்நிலையில் கோலியின் ஆட்டம் பற்றி பேசியுள்ள முன்னாள் வீரரான முகமது கைஃப் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார். அதில் “கோலி எந்தவொரு அணிக்கும் ஆபத்தானவர்தான். ஆனால் அவர் தன்னுடைய ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அவர் தேவையில்லாமல் இறங்கி வந்து ஆடி எட்ஜ் ஆகி அவுட் ஆனார்.

அவர் தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை 130 வரை எடுத்து சென்றாலே போதும். அவர் 140 க்குக் கூட ஆசைப்பட தேவையில்லை. இந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினாலே அவர் 70 ரன்கள் வரை சேர்க்க முடியும்.  அதுவே நல்ல இன்னிங்ஸாக இருக்கும். இன்னிங்ஸ் தொடக்கத்தில் பொறுமை காத்து, மோசமான பந்துகளை மட்டும் பவுண்டரிகளுக்கு அடிக்க முயல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“ஷிவம் துபே இந்திய அணிக்குத் தேவையில்லை… ஏன் என்றால்?” – முன்னாள் வீரரின் கருத்து!