Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் இங்கிலாந்து சிட்டிசன்ஷிப்.. ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆசைப்படும் முகமது ஆமீர்

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (08:25 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் எப்போதுமே வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் சிறப்பானப் பங்களிப்பை செய்துள்ளது. வாசிம் அக்ரம், வக்கார் யுனிஸ், சோயிப் அக்தர் ஆகியோர் வரிசையில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகச்சிறு வயதிலேயே (17 வயது) சூதாட்டப் புகாரில் சிக்கி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார் அமீர். பின்னர் நன்னடத்தைக் காரணமாக சீக்கிரமே விடுதலையான அமீர் பாகிஸ்தான் அணிக்காக மீண்டும் விளையாடினார்.

அவர் சிறப்பாக பந்துவீசினாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் அவருக்கும் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் திடீரென அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் இப்போது அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த நாட்டிலேயே குடியேற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த தகவல் சொல்லப்பட்டு வந்தாலும், இப்போது திடீரென இந்த தகவல் இப்போது வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் அவர் இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து குடியுரிமை பெற்றுவிடுவார் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.  இதுபற்றி பேசியுள்ள அமீர் “ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments