அணிக்குள் திரும்பும் இரண்டு முக்கிய வீரர்கள்… ஆஸி அணிக்கு திருப்புமுனையாக அமையுமா?

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (09:37 IST)
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய அணி.

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும்.

இந்நிலையில் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் ஆகிய இருவரும் மூன்றாவது டெஸ்ட்டுக்கு உடல் தகுதியோடு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இவர்கள் இருவரும் அணிக்குள் இடம்பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ஹேசில்வுட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேட்ச் பார்க்கிற ஆசையே போயிருச்சு.. மீண்டும் மீண்டும் தோற்கும் சிஎஸ்கே..!

கடைசி 2 ஓவர்களில் மாயாஜாலம்.. குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!

SRH ஜெயித்தாலும் அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்.. கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ..!

நான் மட்டும் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால் லக்னோ அணியை தடை செய்திருப்பேன்: லலித் மோடி

15 ஆண்டுகளுக்கு முன் உலகக்கோப்பை பெற்ற நாள் இன்று.. தோனி செய்த சம்பவம்..

அடுத்த கட்டுரையில்
Show comments