Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த தெ.ஆ.; 371 ரன்களை விரட்டி பிடித்து சாதனை

ஆஸ்திரேலியாவை புரட்டி எடுத்த தெ.ஆ.; 371 ரன்களை விரட்டி பிடித்து சாதனை
, வியாழன், 6 அக்டோபர் 2016 (15:08 IST)
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 371 ரன்களை 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டிப் பிடித்து சாதனைப் படைத்துள்ளது.
 

 
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
 
இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 371 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக டேவிட் வார்னர் 117 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 108 ரன்களும் குவித்திருந்தனர்.
 
பின்னர், கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் குவிண்டன் டி காக் 49 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஹசிம் அம்லா 30 பந்துகளில் 45 ரன்களும், டு பிளஸ்ஸி 32 பந்துகளில் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
 
ஒரு கட்டத்தில் 179 ரன்களுக்குள் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்ததால், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் நிறைய இருப்பதாக தெரிந்தது. ஆனால், அந்த எண்ணங்களை வெறும் கனவாக மாற்றினார் டேவிட் மில்லர்.
 
முதலில் மெதுவாக ஆடிய டேவிட் மில்லர் 45 தனது அரைச்சதத்தைக் கடந்தார். ஆனால், அடுத்த 50 ரன்களை 24 பந்துகளில் சேர்த்தார். அதாவது 69 பந்துகளில் [9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] சதம் கடந்தார்.
 
இறுதியில் 49.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. இது ஒருநாள் போட்டியில் இரண்டாவது மிகப்பெரிய சேசிங்காக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே, 2006 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா நிர்ணயித்த 435 ரன்களை இதே தென் ஆப்பிரிக்கா அணி தகர்த்ததே இதுவரை உலக சாதனையாக உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு துர் கனவை ஆஸ்திரேலியா அணிக்கு தென் ஆப்பிக்கா அணி கொடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த ஆண்டு ஐ.பி.எல் நடக்குமா?? பி.சி.சி.ஐ தலைவர் அனுராக் பரபரப்பு தகவல்