ஆஸ்திரேலிய தொடரில் கோலி படைக்கக் காத்திருக்கும் சாதனைகள்..!

vinoth
வியாழன், 16 அக்டோபர் 2025 (13:29 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீரென கடந்த ஏப்ரல் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.  ஏற்கனவே அவர் டி 20 போட்டிகளில் இருந்தும் கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்துவிட்டதால் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நான்கு மாதங்களாக எந்த சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாத அவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இதுவே அவரது சர்வதேசக் கிரிக்கெட்டின் கடைசி தொடராக இருக்கும் சில நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் ரசிகர்கள் அதை நம்பத் தயாராக இல்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கோலி படைக்கவுள்ள சில சாதனைகளின் பட்டியலைப் பார்க்கலாம்.
  1. இன்னும் ஒரு சதம் அடிக்கும்பட்சத்தில் ஒரு பார்மட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.
  2. 401 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் அதிவேகமாக 28000 சர்வதேச ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
  3. 54 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
  4. இன்னும் 67 ரன்கள் சேர்க்கும்பட்சத்தில் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் (50 ஓவர் மற்றும் இருபது ஓவர்) அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.
  5. வெற்றிபெறும் போட்டியில் 2 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் வெற்றி பெற்ற ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்கள் சேர்த்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.
  6. இந்த தொடரில் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில் வெளிநாடுகளில் 30 சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments