Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 சீசன்கள்.. 748 ஆட்டங்கள்.. இத்தனை கோல்களா? – பீலே சாதனையை சமன்செய்த மெஸ்சி!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (09:40 IST)
நேற்றைய லா லிகா போட்டியில் மெஸ்சி அடித்த கோல் மூலமாக அதிக கோல்கள் அடித்த பீலேவின் சாதனையை சமன் செய்துள்ளார் லியோ மெஸ்சி.

கால்பந்தாட்ட க்ளப் ஆட்டங்களில் பிரபலமான ஸ்பெயினின் லா லிகா போட்டிகள் விமரிசையாக நடந்துவருகின்றன. இதில் நேற்றைய ஆட்டத்தில் பார்சிலோனா அணி வெலன்சியா அணியை எதிர்கொண்டது. முன்னதாக ரியல் சோசிடாடுடனான ஆட்டத்தில் மெஸ்சி கோல் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு அன்று அவர் கோல் அடித்திருந்தால் ஒரே க்ளப்புக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் பீலேவை அன்றே சமன் செய்திருப்பார்.

அந்த வாய்ப்பு நழுவி போனாலும் நேற்றைய வெலன்சியா அணியுடனான போட்டியில் தனது சாதனை கோலை அடித்தார் லியோ மெஸ்சி. வெலன்சியா  - பார்சிலோனா ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனாலும் மெஸ்சி புதிய சாதனை படைத்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கடந்த 17 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் லியோனல் மெஸ்சி இதுவரை 748 போட்டிகளில் விளையாடி 643 கோல்கள் அடித்துள்ளார். கால்பந்தாட்ட லீகுகளில் ஒரே அணிக்காக அதிக கோல் அடித்த பீலேவின் சாதனையை இதன்மூலம் மெஸ்சி சமன்செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

என் உலகமே அவங்கதான்… எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

அடுத்த கட்டுரையில்
Show comments