Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே அணியில் மேலும் ஒரு விக்கெட் காலியா? இளம் வீரரின் காயத்தால் சிக்கல்!

vinoth
வியாழன், 7 மார்ச் 2024 (09:46 IST)
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான சீசன் மார்ச் 22 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சி எஸ் கே மற்றும் பெங்களுர் அணிகள் மோதவுள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் ஒவ்வொருவராக சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தோனி, ருத்துராஜ் உள்ளிட்ட வீரர்கள் வந்துவிட்ட நிலையில் இன்னும் ஜடேஜா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் வந்து சேரவில்லை.

இந்நிலையில் சென்னை அணியின் முக்கியப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மதிஷா பதீரனா காயத்தால் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடிய அவருக்கு காலில் காயம் ஏறபட்டுள்ளது. ஏற்கனவே சி எஸ் கே அணியின் டெவன் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பதிரனாவும் விலகினால் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

ஆசிய கோப்பை அணி தேர்வு குறித்த விமர்சனங்கள்: கவாஸ்கர் பதிலடி..!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments