Publish Date: Tue, 17 May 2022 (09:06 IST)
Updated Date: Tue, 17 May 2022 (09:12 IST)
விபத்தில் மறைந்த சைமண்ட்ஸுக்கு முதலுதவி செய்ததாக விபத்து நடந்த இடத்துக்கு சென்ற நபர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னதாக ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து உருண்டதாகவும், இதனை அடுத்து ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் காருக்குள்ளேயே உயிரிழந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விபத்துப் பகுதிக்கு அப்பகுதியில் வசிக்கும் நபரான வெய்லன் டவுன்சன் என்பவர்தான் அப்பகுதிக்கு முதலில் சென்று சைமண்ட்ஸைப் பார்த்துள்ளார். இதுபற்றி கூறியுள்ள அவர் “சத்தம் கேட்டு நான் அங்கு சென்றேன். காரில் இருந்து அவரை வெளியே இழுக்க முயன்றேன். அவருக்கு CPR செய்தும் பார்த்தேன். ஆனால் அவர் அவரிடம் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை” எனக் கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணையில் தற்போது வரை கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து தெரியவரவில்லை.