எந்த ஒரு பில்டப்பும் இல்லாம சய்லெண்டா நடக்கும்... தோனி குறித்து கவாஸ்கர்!

செவ்வாய், 24 மார்ச் 2020 (13:17 IST)
தோனி மற்றவர்களை போன்று மிகப்பெரிய அளவில் ஓய்வு முடிவை அறிவிக்கமாட்டார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 
 
உலகக்கோப்பைக்குப் பின் சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது மட்டுமே ஒரே வாய்ப்பு என சொல்லப்பட்டது. 
 
கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகமாகியுள்ளது. மேலும் ஐபிஎல் நடந்து அதில் சிறப்பாக அவர் விளையாடினாலும் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான் என தெரிகிறது. எனவே அவர் நிச்சயம் ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில், மற்ற வீரர்களை போன்று மிகப்பெரிய அறிவிப்போடு எம்எஸ் டோனி ஓய்வு பெறாமல் அமைதியாக வெளியேறுவார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, 
 
டி20 உலக கோப்பையில் தோனி விளையாடுவதை நான் பார்க்க விரும்பினேன். தற்போதுள்ள நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை. அணி அவரை விட்டு நகரத் தொடங்கிவிட்டது. தோனி மற்றவர்களை போன்று மிகப்பெரிய அளவில் ஓய்வு முடிவை அறிவிக்கமாட்டார். அவர் ஓசையின்றி அமைதியான முறையில் ஓய்வு பெறுவார் என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் இந்து முஸ்லீமாக அல்லாமல் மனிதனாக சிந்தியுங்கள் – சோயிப் அக்தர் அட்வைஸ் !