Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

190 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து: இந்தியா அபார பந்து வீச்சு!

190 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து: இந்தியா அபார பந்து வீச்சு!

190 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து: இந்தியா அபார பந்து வீச்சு!
, ஞாயிறு, 16 அக்டோபர் 2016 (17:28 IST)
இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்துள்ள நிலையில், 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று இந்தியாவை எதிர்கொண்டது.


 
 
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியினரின் நேர்த்தியான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது நியூசிலாந்து அணி.
 
14 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த அந்த அணி 65 ரன்னில் 7 விக்கெட்டை இழந்து மிகவும் பரிதாபமாக இருந்தது. 100 ரன்னை அந்த அணி கடக்குமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர் லதம் மட்டுமே பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். 106 ரன்னில் 8-வது விக்கெட்டையும் இழந்த அந்த அணிக்கு சௌதி மற்றும் லதமின் ஆட்டம் சற்று ஆறுதல் அளித்தது.
 
இந்த இணை மிகவும் பொறுப்புடனும் அதிரடியுடனும் விளையாடி 177 ரன்னில் பிரிந்தது. இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 190 ரன் குவித்தது. சௌதி 55 ரன் குவித்தார். தொடக்க ஆட்டக்காரர் லதம் 79 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
 
இந்தியா தரப்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் அமித் மிஷ்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் மற்றும் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 191 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கியுள்ளது இந்திய அணி.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்