Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனில் கும்ப்ளேவை போற்றிப் புகழும் சச்சின் டெண்டுல்கர்

Webdunia
புதன், 13 ஜூலை 2016 (10:56 IST)
அனில் கும்ளே மீது முழு நம்பிக்கை உள்ளது என்றும், திறம்பட வழிநடத்திச் செல்வார் என்றும் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

 
மேலும் அவர் கூறியதாவது, ”அனில் கும்ப்ளேவுடன் எனது அனுபவம் அற்புதமானது. அவர் எப்போது மேட்ச் வின்னராக விளங்கக்கூடியவர். இளம் வீரர்கள் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
 
அனில் கும்ப்ளே, அற்புதமான விளையாட்டின் மூலம், தான் கற்றுக்கொண்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறார். அனில் கும்ளே உடன் சக வீரராக கிரிக்கெட் ஆடியுள்ளதால், அவரது பாசிட்டிவ், நெகடிவ் அம்சங்கள் தெரியும்.
 
அனில் கும்ளே மீது முழு நம்பிக்கை உள்ளது, நெருக்கடியான தருணங்களில் திறமையாக விளையாடுவது எப்படி என்பதை, அனில் கும்ளே, இந்திய வீரர்களுக்கு சொல்லித் தருவார்.
 
ஏறக்குறைய 20 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடியுள்ள கும்ளே, பெரும்பாலும் திறமையாக ஆடி, வெற்றி பெறுவது எப்படி என்றே சிந்தனை செய்யக்கூடிய நபர்.
 
தொடர்ந்து வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன். இந்திய கிரிக்கெட் அணியை தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே திறம்பட வழிநடத்திச் செல்வார்” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments