Webdunia - Bharat's app for daily news and videos

Install App

45 வயதில் ஒப்பந்தமாகி ஆஸ்திரேலிய வீரர் புதிய சாதனை

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2016 (18:38 IST)
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் 45 வயதில், பிக் பாஷ் லீக் தொடரில் ரெனேகட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு சாதனைப் படைத்துள்ளார்.
 

 
இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் தற்போது இந்தியாவில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற அதிக வயதுடைய மூத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
 
பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி ஸ்கார்செர்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹாக், பிக் பாஷ் தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
 
இந்த நிலையில் சிட்னி ஸ்கார்செர்ஸ் அணியில் இருந்து விலகிய 45 வயதான பிராட் ஹாக்கை மெல்மோர்ன் ரெனேகட்ஸ் அணி 2016-17 சீசனுக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.
 
இது குறித்து கூறியுள்ள பிராட் ஹாக், ”நான் இது போன்ற உயர்ந்த வாய்ப்பை எடுக்கவில்லை. இந்த வாய்ப்பை சிறந்த சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுவேன்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ஆஸ்திரேலியா தொடர்… அணியில் இடம் கிடைக்காததால் புஜாரா எடுத்த முடிவு!

ஒப்பந்தம் ஆன இருபதே நாட்களில் பயிற்சியாளர் பதவியில் இருந்து கில்லஸ்பி நீக்கம்… என்னதான் நடக்குது பாக். கிரிக்கெட்டில்?

இந்திய அணியின் கேப்டன் ஆனார் பும்ரா.. ரோஹித் சர்மா விலகியது ஏன்?

அந்தரத்தில் தொங்கும் பார்டர் - கவாஸ்கர் ட்ராஃபி! அடுத்தடுத்து விலகும் முக்கிய வீரர்கள்! - என்ன காரணம்?

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

அடுத்த கட்டுரையில்
Show comments