Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் - கும்ப்ளே அதிரடி

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (11:58 IST)
பயிற்சிக்கு லேட்டாக வந்தால், அணியின் பேருந்தை தவறவிட்டால், வீரர்களுக்கு 50 டாலர் அபராதம் விதிக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே அதிரடி காட்டியுள்ளார்.


 


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் தொடர்ச்சியான போட்டிகளுக்கு முன்னதாக, இந்திய அணி வீரர்களிடையே கட்டுப்பாடு நிறைந்த ஒழுக்கத்தை விதைத்து விட பயிற்சியாளர் கும்ப்ளே திட்டமிட்டுள்ளார்.

தற்போது இந்திய அணி, மேற்கிந்திய தீவுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு,  4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஜுலை 14ம் தேதி மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியுடன், இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி வலுவான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.

அதன்படி, பயிற்சிக்கு தாமதமாக வந்தாலோ, பேருந்தை தவறவிட்டாலோ வீரர்களுக்கு 50 டாலர் அபாராதம் விதிக்கப்படும். அதுபோல ஒவ்வொரு 4 நாட்களுக்கும் ஒரு முறை, அணி வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளும் விவாதத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.  வீரர்கள் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வகையிலேயே கும்ப்ளே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அதே வேளையில் வீரர்களின் சுதந்திரம் பாதிக்கபடாது எனவும், சுதந்திரத்தின் எல்லையறிந்து வீரர்கள் நடந்து கொள்ள வேண்டுமென்றும் கும்ப்ளே கருதுவதாகத் தெரிகிறது. அத்துடன் இந்திய  அணி வீரர்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே தனது பயிற்சியாளர் பணியின் முதல் பணியாக இருக்க வேண்டுமென கும்ப்ளே முயற்சி எடுத்து வருகிறார் என தெரிகிறது.


 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments