கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

Webdunia
திங்கள், 16 ஜூன் 2025 (10:29 IST)
இந்திய அணி இம்மாதம் 20 ஆம் தேதி தொடங்கும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த தொடருக்காக இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த அணியில் கோலி, ரோஹித் மற்றும் அஸ்வின் போன்ற மூத்த வீரர்கள் இல்லாதது பெரியப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இளம் இந்திய அணியை ஷுப்மன் கில் கேப்டனாகப் பொறுப்பேற்று வழிநடத்தவுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் பொறுப்பேற்றுள்ளார். இந்த தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று சொல்லலாம். இதனால் நடக்கவுள்ள தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், புதிய கேப்டன் கில் பற்றி பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது. அதில் “கடந்த சில ஆண்டுகளாகவே கில் அணியை உற்சாகமாக வைத்துக் கொள்வதில் பங்காற்றியுள்ளார். அவர் கடந்த சில ஆண்டுகளாக கோலி மற்றும் ரோஹித் ஆகியோரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுள்ளார். ரோஹித்துடன் முக்கியமான நேரங்களில் அவர் நடத்திய விவாதங்களை நான் பார்த்துள்ளேன். கோலி மற்றும் ரோஹித் ஆகியோரிடம் இருக்கும் தகுதிகள் அவரிடம் உள்ளன. அவர் இந்திய அணியை வழிநடத்தத் தயாராகிவிட்டார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வொயிட் வாஷ் தோல்வி… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இந்தியா சரிவு!

முற்றிலும் சரணடைந்துவிட்டார்கள்.. இது நடந்திருக்க கூடாது: கும்ப்ளே கண்டனம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: மோசமான தோல்வியால் பாகிஸ்தானுக்கு கீழே போன இந்தியா..!

இந்திய கிரிக்கெட்தான் முக்கியம், நான் முக்கியமில்லை.. தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு காம்பீர் பதில்!

25 ஆண்டுகால இந்திய அணியின் சாதனையைத் தாரைவார்த்த கம்பீர் & கோ… ரசிகர்கள் ஆத்திரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments