Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனியே உங்களிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பார்… அவசரப்பட வேண்டாம்- கோலிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

தோனியே உங்களிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைப்பார்… அவசரப்பட வேண்டாம்- கோலிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!
, சனி, 14 ஜனவரி 2023 (10:31 IST)
இந்திய அணிக்கு 2014 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார் விராட் கோலி.

இந்திய அணியை மூன்று வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட்ட தோனி, டெஸ்ட் அணியை சரியாக வழிநடத்த முடியாமல் கேப்டன் பொறுப்பை கோலியிடம் ஒப்படைத்தார். கோலி மிகச்சிறப்பாக டெஸ்ட் கேப்டன்சியை செய்யவே 2017 ஆம் ஆண்டு அவருக்கு ஒருநாள் மற்றும் டி 20 கேப்டன்சி பொறுப்பும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மிக சீக்கிரமாகவே கேப்டன் பொறுப்பை பெற கோலி நினைத்ததாக இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் “2016 ஆம் ஆண்டிலேயே ஒருநாள் அணியை வழிநடத்த கோலி மிகவும் ஆர்வமாக இருந்தார். அப்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவரிடம் பேசி ‘நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். எப்படி டெஸ்ட் கேப்டன்சியை உங்களிடம் கொடுத்தாரோ, அதுபோல லிமிடெட் ஓவர் கேப்டன்சியையும் கொடுக்கவேண்டும். அதுவரை நீங்கள் அவரை மதிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் கேப்டன் ஆனதும் வீரர்கள் உங்களை மதிப்பார்கள்’ என அட்வைஸ் செய்தார்” என தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸிக்கு எதிரான டெஸ்ட் தொடர்… சூர்யகுமார் யாதவ்வுக்கு வாய்ப்பு