Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் கோலி ஒன்னும் பெருசா சாதிக்கல… முன்னாள் வீரர் சொன்ன புள்ளி விவரம்!

vinoth
திங்கள், 11 மார்ச் 2024 (10:31 IST)
இன்னும் 11 நாட்களில் ஐபிஎல் 2024 தொடங்க உள்ள நிலையில் அதற்காக 10 அணிகளும் தங்கள் வீரர்களை ஒருங்கிணைத்து தயாராகி வருகின்றனர். இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான தொடரை நிறைவு செய்துள்ள நிலையில் இந்திய வீரர்களும் விரைவில் தங்கள் அணிகளோடு இணைய உள்ளனர்.

இந்த முறை முதல் போட்டி கடந்த முறை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் சி எஸ் கே அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடுகிறது.

இந்த போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் “சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை கோலி பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. அவர் 30 ரன்கள் சராசரி மட்டுமே வைத்துள்ளார். அதிலும் அவரின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக 110 என்ற அளவிலேயே உள்ளது.” எனக் கூறியுள்ளார். கடந்த சீசனில் கோலி அசுர பார்மில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி நாளில் சிராஜுக்கு உத்வேகம் அளித்த ரொனால்டோவின் வால்பேப்பர்…!

வெற்றி தோல்வி சகஜம்… ஆனா சரணடைய மாட்டோம்… கம்பீர் பேச்சு!

சிராஜுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்.. விராட் கோலி நெகிழ்ச்சி!

நான் ஏன் ஐபிஎல் விளையாடுவதில்லை… தோனியை நக்கல் செய்தாரா டிவில்லியர்ஸ்?

ஓவல் டெஸ்ட்… கடைசி நாளில் பவுலர்கள் செய்த மேஜிக்… இந்திய அணி த்ரில் வெற்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments