Publish Date: Thu, 07 Mar 2024 (07:16 IST)
Updated Date: Thu, 07 Mar 2024 (07:25 IST)
சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தலைமையில் சி எஸ் கே அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் அதிகமுறை கோப்பையை வென்ற அணிகளில் ஒன்றாக சி எஸ் கே உள்ளது.
இன்னும் 20 நாட்களில் ஐபிஎல் 2024 தொடங்க உள்ள நிலையில் தோனி தன்னுடைய முகநூலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் “புதிய சீசனுக்காக காத்திருக்க முடியவில்லை. புதிய பொறுப்பு. மேலும் அப்டேட்களுக்கு காத்திருங்கள்” எனக் கூறியுள்ளார். இதனால் சி எஸ் கே அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்துள்ளன. தோனிக்கு அணியில் வேறு ஏதேனும் புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னை வந்தடைந்தார் தோனி.
இந்நிலையில் தோனி ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் ஜியோ சினிமாஸ் ஓடிடியின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இதுதான் அவர் சொன்ன புதிய ரோலா? இதுக்குதான் இவ்வளவு பில்டப்பா என சலித்துப் போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.
vinoth
Publish Date: Thu, 07 Mar 2024 (07:16 IST)
Updated Date: Thu, 07 Mar 2024 (07:25 IST)