Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் பேட்டிங்கை விமர்சிப்பது துரதிர்ஷ்டமானது: கோலி பதிலடி!

Webdunia
திங்கள், 16 ஜூலை 2018 (16:30 IST)
கடந்த 2 ஆண்டுகளாகவே தோனி மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் அவர் மீதான விமர்சனங்களால் அழுத்தத்தை தாங்கிக்கொண்டு போட்டிகளில் விளையாடிவருகிறார். 
 
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியின் போது அவர் சற்று தடுமாற்றத்துடன் ஆடியதால், அவர் மீது மீண்டும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், இந்திய அணி கேப்டன் கோலி இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். 
 
கோலி கூறியதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து தோனியின் பேட்டிங் திறமை குறித்த கேள்விகள் எழுந்து வருகிறது. அவரின் பேட்டிங் வரிசை 7 அல்லது 6-க்கு செல்வதன் காரணமாகவே அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.
 
ரோஹித் சர்மா, தவண், கோலி, ராகுல், ரெய்னா ஆகியோருக்கு பின் 6 வது வீரராக தோனி களமிறங்குகிறார். இதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்கும் வாய்ப்பு குறைவுதான்.
 
ஒருவேளை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நெருக்கடியை சமாளித்து பேட் செய்ய வேண்டி உள்ளது. ஏதாவது ஒரு போட்டியில் விளையாடாத தோனியின் பேட்டிங்கை விமர்சிப்பதும், கேள்விக்கு உள்ளாக்குவதும் நியாயமில்லை என்று கோலி பதிலடி கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments