“கோலி உச்சத்தில் இருக்கும் போதே ஓய்வு பெறவேண்டும்…” பாகிஸ்தான் வீரரின் கருத்து!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:15 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி ஓய்வு பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பேசியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத விராட் கோலி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 61 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்து அந்த மோசமான நாட்களை முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த ஆசியக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 276 ரன்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் கோலியின் கம்பேக் குறித்து அனைவரும் பாராட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கோலி தன் ஃபார்மின் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வை அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “கோலி தன் ஓய்வு பற்றி சிந்திக்கும் காலம். ஒரு சில வீரர்களே தான் உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வு முடிவை எடுப்பார்கள்.” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவு போல் தான் இதுவும்.. சுனில் கவாஸ்கர் கிண்டல்..!

இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல் வந்தாலும் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்குமா? கெவின் பீட்டர்சன் கேள்வி

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவில்லை என்றால் ரூ.4500 கோடி இழப்பு: ஐசிசி நடவடிக்கை என்ன?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான்

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

அடுத்த கட்டுரையில்
Show comments