Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக லாபம் பார்த்தும் சம்பளத்தை ஏன் உயர்த்தவில்லை: பிசிசிஐ-க்கு கோலி கேள்வி!!

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2017 (16:29 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சம்பள உயர்வு பற்றி பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் உள்ள முக்கிய வீரர்களுக்கு இந்த ஆண்டு  வருடாந்திர அடிப்படை ஒப்பந்தங்கள் மூலம் சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.
 
ஆனாலும், முக்கிய வீரர்களுக்கு மட்டும் இல்லாமல் இந்திய அணியில் இருக்கும் மற்ற இளம் வீரர்களுக்கும் சம்பளத்தை அதிகரிக்கும்படி கோரியுள்ளார் கோலி. ஐபிஎல் போட்டிகளுக்கு பெரிய தொகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  பிசிசிஐதான் கிரிக்கெட் சங்கங்களில் அதிக லாபம் பார்க்கும் சங்கமாக இருக்கிறது. எனவே, வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்தும் படி கேட்கப்பட்டுள்ளதாம். 
 
வீரர்களின் சம்பள உயர்வு குறித்து விராட் கோலி முன்னாள் கேப்டன் தோனி மற்றும் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளாராம். விரைவில் இது குறித்து ஆலோசனை செய்த பின்னர் முடுவெடுக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments