Publish Date: Mon, 20 Sep 2021 (20:08 IST)
Updated Date: Mon, 20 Sep 2021 (20:11 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் விராட் கோலி இன்று 200 வது போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நேற்று முதல் தொடங்கியது. இன்று கொல்கத்தா அணியுடன் பெங்களூரு மோதவுள்ளது.
இந்நிலையில், இன்று 200 வது போட்டியில் விராட் கோலி விளையாட உள்ளார். மேலும் இதுவரை அவர் 199 போட்டிகளில் விளையாடி 6,076 ரன்கள் அடித்துள்ளார். அதில், 40 அரை சதங்களும், 5 சதங்களும் அடித்துள்ளார். 524 பவுண்டரிகளும், 205 சிக்ஸர்களும் அடித்து அசத்தியுள்ளார்.