‘கிரிக்கெட்டை விட கோலி பெரியவர் இல்லை’… அஸ்வின் கருத்து!

vinoth
வியாழன், 19 ஜூன் 2025 (08:52 IST)
இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக . இளம் இந்திய அணி இங்கிலாந்து சென்று அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.  முதல் டெஸ்ட் போட்டி ஹெட்டிங்லேவில் நாளைத் தொடங்கவுள்ளது.இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இந்த இளம் அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்போடு வைத்திருந்த வீரர்களில் ஒருவராகக் கோலி இருந்தார். அவர் இல்லாமல் இந்திய அணி இங்கிலாந்தில் எப்படி விளையாடப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்து வீரர்கள் சிலரே “கோலியை இந்த தொடரில் மிஸ் செய்வோம்” எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வின், கோலி குறித்து தெரிவித்துள்ள கருத்துக் கவனம் பெற்றுள்ளது. அதில் “கோலி ஒன்றும் கிரிக்கெட்டை விடப் பெரியவர் இல்லை. அவரை இந்திய அணி மிஸ் செய்யாது. அவர் கிரிக்கெட் விளையாடினார். தற்போது ஓய்வு பெற்றுள்ளார்” என்று மிகவும் சாதாரணமாக அவரை மதிப்பிட்டுள்ளார். அஸ்வினின் இந்த கருத்து தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments