Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலகக் கோப்பையில் கோலி இருக்கிறாரா? இல்லையா?-பிசிசிஐ முடிவு

Sinoj
செவ்வாய், 12 மார்ச் 2024 (21:38 IST)
டி-20 உலகக் கோப்பையில்  நட்சத்திர வீரர் கோலி அணியில் இடம்பெற வாய்ப்பு குறைவு என தகவல் வெளியாகிறது.

ஐபிஎல் 17 வது சீசன் முடிந்த பிறகு டி 20  உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்கவுள்ளது.

ஜூன் மாதம் 5 ஆம் தேதி இந்திய அணி , அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது.

இத்தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. அதன்படி லீக் சுற்று மட்டுமே அமெரிக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற   போட்டிகளுக்காக பிட்ச் எப்படி இருக்கும்? என்று ஆராய பிசிசிஐ  தேர்வுக்குழு  தலைவர் அஜித் அகார்கர் நிர்வாகிகளை இதற்கென்று பிரத்யேகமாக  நியமித்திருந்தார்.

அந்தக் குழு இதுகுறித்த அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்திருந்தனர். அதில்  நடக்கும் போட்டிகளில் ஸ்லோ பிட்ச் இருக்கும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், ‘’ஸ்லோ பிட்ச்களில் கோலி அபாரமாக விளையாடியது இல்லை என்பதால் அவரை டி 20 உலகக் கோப்பை போட்டியில் சேர்க்க முடியாத நிலையுள்ளது…ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுவார் என்பதை பொறுத்து உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ மீட்டிங்கில் அகார்கர் தெரிவித்ததாக ‘’கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments