Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

vinoth
சனி, 24 மே 2025 (11:01 IST)
கடந்த பல சீசன்களாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பெங்களூர் அணி, இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரையிலான 13 போட்டிகளில் 8 போட்டிகளை வென்று, ஒரு போட்டியில் முடிவின்றி 17 புள்ளிகளோடு புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இடம்பிடித்து ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

அதனால் இந்த முறை அந்த அணிக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என யூகிக்கப்படும் நிலையில், அந்த அணிக்கு அடுத்தடுத்துப் பெரும் பின்னடைவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.  ஒரு வார ஒத்திவைப்பதற்குப் பிறகு தற்போது ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கிய நிலையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஆர் சி பி க்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. ஒன்றில் தோல்வியும், ஒரு போட்டி கைவிடப்பட்டும் ஆர் சி பி அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்த முறை ஆர் சி பி அணிக் கோப்பையை வெல்லவேண்டும் என்பதை விட, கோலி கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதுதான் பலகோடி ரசிகர்களின் ஆசையாக உள்ளது. 18 ஆண்டுகளாக ஒரே அணிக்காக விளையாடி வரும் கோலி அந்த அணியில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் ஆர் சி பி அணிக்காக 800 பவுண்டரிகளை விளாசினார். ஒரே அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச பவுண்டரிகள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இர்ஃபான் பதான் மட்டும் சொல்லல… தோனிய சோதனை செய்யணும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பிசிசிஐ தலைவர் ஆகிறாரா சச்சின் டெண்டுல்கர்?

முதல் 5 போட்டிகளிலும் 50+ ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர்.. புதிய உலக சாதனை..!

தோனியின் அந்த குணம் என்னைப் பிரமிக்கவைக்கிறது… குட்டி ABD கருத்து!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகார் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அடுத்த கட்டுரையில்
Show comments