Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் மற்றும் கோலி ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வு கொடுங்கள்… முன்னாள் இந்திய வீரர் கோரிக்கை!

vinoth
வெள்ளி, 5 ஜூலை 2024 (08:13 IST)
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு தீரில்லர் படம் போல சென்ற அந்த போட்டியில் இந்திய அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு உலகக் கோப்பை பெற்றுத் தந்த கேப்டன்களில் ஒருவராக ரோஹித், கபில்தேவ் மற்றும் தோனிக்கு அடுத்து இணைந்துள்ளார். மேலும் இந்த வெற்றியோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். அதே போல இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரும் ஓய்வை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய வீரர்களான ரோஹித் மற்றும் கோலி ஆகியோரை கௌரவிக்கும் விதமாக அவர்களின் ஜெர்ஸி எண்களான 45 மற்றும் 18 ஆகியவற்றுக்கும் ஓய்வு கொடுத்து அதை யாருக்கும் தரக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஏற்கனவே சச்சின் மற்றும் தோனி ஆகியோருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments