Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

vinoth
புதன், 26 மார்ச் 2025 (08:35 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஆனாலும் அந்த அணிக்கு சென்னை, மும்பை போன்ற பல முறைக் கோப்பை வென்ற அணிகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கு புதிய கேப்டன் அந்த அணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவராவது ஆர் சி பி அணியின் சோக வரலாற்றை மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆர் சி பி அணி இந்த ஆண்டு அதிரடியான தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக விளையாட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த அணியில் இணைந்துள்ள ஃபில் சால்ட் கொல்கத்தா அணிக்கு எதிரானப் போட்டியில் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அவரின் அதிரடிக்கு இணையாக கோலியும் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி பின்னர் அவர் அவுட் ஆனதும் நிதானத்தைக் கடைபிடித்து கடைசி வரை ஆடி போட்டியை வெற்றிகரமாக முடித்தார்.

இந்த ஜோடி பற்றி பேசியுள்ள சுரேஷ் ரெய்னா “அவர்களின் இந்த இன்னிங்ஸ் வெறும் டிரைலர்தான். அவர்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவார்கள். இப்படியே சென்றால் இந்த தொடரின் மிகவும் ஆபத்தான தொடக்க ஜோடியாக இருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ் அய்யரின் 97 ரன்கள்.. குஜராத்தை வீழ்த்திய பஞ்சாப்..!

இம்பேக்ட் ப்ளேயர் விதியை வேண்டாம் என்று சொன்னேன்.. தோனி பகிர்ந்த தகவல்!

சென்னையில் அனிருத் போல், ஐதராபாத்தில் தமன் இசை விருந்து.. ஐபிஎல் போட்டி அப்டேட்..!

மோஹித் ஷர்மாவின் வாழ்வின் முக்கியமான சிங்கிளாக இது இருக்கும்.. பாஃப் டு ப்ளசீஸ் மகிழ்ச்சி!

இந்த பெருமையெல்லாம் என் குருநாதருக்குதான்! ஷிகார் தவானுக்கு வீடியோ கால் போட்ட அஷுதோஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments