Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறு செய்துவிட்டோம்: தோல்விக்கு பின் வருந்தும் கோலி!

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (17:56 IST)
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது.
இது குறித்து கோலி பின்வருமாறு பேசியுள்ளார். நாங்கள் விளையாடிய ஆட்டத்தை நினைத்து எந்த வகையிலும் பெருமை கொள்ள முடியாது. கடைசியாக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆட்டத்தில் நாங்கள் முழுமையாக வீழ்த்தப்பட்டு விட்டோம்.
 
நாங்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது தோல்விக்கு நாங்கள் தகுதியான அணிதான். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆடுகளத்தையும், வானிலையையும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். 
 
அணியில் வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எனது முதுகுவலி பற்றி கவலைப்பட வேண்டாம். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 5 நாட்கள் இடைவெளி உள்ளது. அதற்குள் குணமடைந்து விடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பி.சி.சி.ஐ-க்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு.. புதிய மசோதாவால் பரபரப்பு..!

மீண்டும் டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர்!.

பும்ரா இல்லாத போட்டிகளில் எல்லாம் இந்தியா வெற்றி பெறுகிறதா? சச்சின் சொல்வது என்ன?

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

அடுத்த கட்டுரையில்
Show comments