Publish Date: Thu, 19 May 2022 (10:51 IST)
Updated Date: Thu, 19 May 2022 (10:55 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டி காக் – ராகுல் பார்ட்னர்ஷிப் அடித்த ரன்கள் மூலம் புதிய சாதனையை எட்டியுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியும் லக்னோ அணியும் மோதிக் கொண்டன.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டி காக் மற்றும் கே.எல்.ராகுல் கடைசி வரை விக்கெட்டே இழக்காமல் பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடினார். 20 ஓவர்களிலும் விக்கெட்டே இழக்காமல் இந்த பார்ட்னர்ஷிப் 210 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் வரலாற்றில் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் ஈட்டிய இரட்டையராக டி காக் – கே.எல்.ராகுல் சாதனை படைத்துள்ளனர். பின்னதாக களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 208 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.