Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தோல்வி ஒரு வகையில் நல்லதே.. கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

vinoth
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:37 IST)
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் சி எஸ் கே அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி சிஎஸ்கே பவுலர்களின் தாக்குதலை தாங்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 34 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த எளிய இலக்கை துரத்திய சி எஸ் கே அணி18 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் சிறப்பாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்த சீசனில் முதல் தோல்வியை தழுவியுள்ளது கொல்கத்தா.

போட்டிக்குப் பின்னர் பேசிய கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் , “நாங்கள் ஆடுகளத்தை தவறாகக் கணித்துவிட்டோம். இந்த மைதானத்தில் 160 முதல் 170 ரன்கள் சேர்த்தாலே போதும், நாங்கள் வென்றிருப்போம். ஆனால் பவர்ப்ளேவுக்குப் பிறகு ஆடுகளம் வெகுவாக மாறிவிட்டது. அதனால் எங்களால் தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியவில்லை. இந்த தோல்வி குறித்து  வீரர்கள் அனைவரும் பேச வேண்டும். இந்த தோல்வி தொடரின் ஆரம்பத்திலேயே வந்தது எங்களுக்கு ஒரு வகையில் நல்லதுதான்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments