Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யார் இவரு..? பவுலரா? ஸோம்பியா? – பேட்ஸ்மேன்களை பீதிக்குள்ளாக்கிய கெவின் கொத்திகோடா!

Advertiesment
Cricket
, வியாழன், 4 பிப்ரவரி 2021 (14:54 IST)
அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் போட்டிகளில் மராத்தா அரேபியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் கெவின்கொத்திகோடாவின் பவுலிங் ஸ்டைல் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டில் பல வித்தியாசமான பவுலர்களை கண்டிருப்போம். ஒவ்வொரு பவுலரும் தனக்கென வித்தியாசமான பவுலிங் முறையை வைத்திருப்பார். அதன்படி லசித் மலிங்கா, புஜாரா, பும்ரா போன்றவர்கள் வித்தியாசமான பந்து வீச்சு முறையால் புகழ்பெற்றவர்கள்.

இந்நிலையில் அபுதாபி டி10 கிரிக்கெட்டில் விளையாடி வரும் இலங்கை வீரர் கெவின் கொத்திகோடாவின் பந்து வீசும் முறை பேட்ஸ்மேன்களை திணறடிப்பதோடு கிலி ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. வேகமாக வந்து கை கால் உடைந்த ஸோம்பி போல குனிந்து வளைந்து பந்தை அவர் லாவகமாக வீசும்போது பந்து வீசுவது பவுலரா? ஸோம்பியா என்றளவில் பேட்ஸ்மேன்கள் மிரண்டு போகின்றனராம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியாவில் அசத்திய சிராஜ் நாளைய போட்டியில் இடம்பெறுவாரா? காம்பீர் பதில்!