Publish Date: Sat, 24 Oct 2020 (08:30 IST)
Updated Date: Sat, 24 Oct 2020 (08:33 IST)
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில்தேவ் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆன்ஜியோ ப்ளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குணமடைந்த கபில் தேவ் மருத்துவமனையில் இருந்தபடி கை காட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.