இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வில்லியம்சன் விளையாடமாட்டார்… நியுசிலாந்து வாரியம் அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 22 அக்டோபர் 2024 (14:30 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியுசிலாந்து அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 6 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கெதிரான இந்த வெற்றி அந்த அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது. மேலும் ஆறாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்யில் கிரோயிங் இஞ்சுரி காரணமாக விளையாடாத கேன் வில்லியம்சன் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது நியுசிலாந்து அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

T20 உலக கோப்பை கிரிக்கெட்!.. இன்று மோதும் 3 அணிகள்!..

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

அடுத்த கட்டுரையில்
Show comments