Publish Date: Fri, 03 Dec 2021 (10:31 IST)
Updated Date: Fri, 03 Dec 2021 (10:34 IST)
நியுசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மும்பையில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் இருந்து ஜடேஜா, ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் யார் யார் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.
அதே போல நியுசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முழங்கால் காயம் காரணமாக விலகியுள்ளார். இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.